Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentசிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சீதா ராமம் நாயகி.. ஐதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஷூட்.. விரைவில் அதிகாரப்பூர்வ...

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சீதா ராமம் நாயகி.. ஐதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஷூட்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தேசிய விருது பெற்ற மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்தார். மாவீரன் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் தன் மக்களுக்காக துணிந்து செயல்படும் ஒரு வீரனாக மாறுவதே கதைக்களம். படத்தின் முதல் பாதி யோகி பாபுவின் ஒன்லின் காமெடியால் தரமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி படு சீரியஸாக போவதாகவும் இருந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.

இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ரங்கூன் திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, எஸ்கே 24 படத்தை இயக்குவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் வெளியாகயுள்ளது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் கதை, திரைக்கதை பணிகள் முடித்து முருகதாஸ் ஷூட்டிங் செல்ல தயாராக இருக்கிறார். தற்போது படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

தெலுங்கு மார்க்கெட்டையும் குறிவைத்து சிவகார்த்திகேயன் இயங்குவதால், தெலுங்கில் மார்க்கெட் உள்ள நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதில் மிருணாள் தாகூர் உடனான டெஸ்ட் ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அதில் முருகதாஸ் திருப்தியடைந்துள்ளாராம்.

- Advertisement -

இதனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எஸ்கே21 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.  ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கத்தி, தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular