Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainment"தி நைட் மேனேஜர்" பாலிவுட்டை கலக்கப் போகும் தமிழன்.. கைதி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.க்கு கிடைத்த...

“தி நைட் மேனேஜர்” பாலிவுட்டை கலக்கப் போகும் தமிழன்.. கைதி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.க்கு கிடைத்த வாய்ப்பு!

ஹாலிவுட்டில் வெளியான ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17ம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

விக்ரம் வேதா, கைதி, அடங்க மறு மற்றும் சுழல் இணையத் தொடர் மூலம் பின்னணி இசையில் கவனத்தை ஈர்த்தவர் சாம் சி.எஸ். அண்மையில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் இந்தியில் வெளியாகிய விக்ரம் வேதா திரைப்படத்திற்கும் சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். இதன் மூலம் பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி.எஸ்., இந்த இணையத் தொடருக்கு பின் பாலிவுட் திரையுலகிலும் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Most Popular