Entertainment

”மெரண்டே போய்ட்டேன்” மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான வாழை.. முதல் விமர்சனத்தை வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் கடந்த ஆண்டு இறுதியில் பகிர்ந்தார்.

அதன்படி வாழை படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் பகிர்ந்த நிலையில், சென்ற நவம்பர் 21ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் நான்காவது படமான இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

இருப்பினும் படம் சிறுவர்களை மையப்படுத்தி உருவாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படம், தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. வாழை திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், “வாழை திரைப்படத்தால் முற்றிலும் திகைத்துவிட்டேன். வாழ்நாள் திரைப்படத்திற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மந்திரத்தால் எங்களை ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள், வாழை படத்தை காண மிகுந்த எதிர்பார்ப்போடு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top