Thursday, April 25, 2024
- Advertisement -
HomeEntertainmentதிரையரங்கிலும் தொடரும் சாதியக் கொடுமை… பத்து தல படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவ மக்களை ...

திரையரங்கிலும் தொடரும் சாதியக் கொடுமை… பத்து தல படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவ மக்களை அனுமதிக்காத ரோகிணி தியேட்டர்… வீடியோ வைரலானதும் பல்டி அடித்த நிர்வாகம்..!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து பத்து தல படத்திற்காக இயக்குனர் ஒபேலியுடன் கைகோர்த்தார் நடிகர் சிம்பு. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தாதா கெட்டப்பில் சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆரம்பத்தில் சிம்புவிற்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால் படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தால் அவரின் காட்சிகளை படக்குழுவினர் அதிகப்படுத்தினர். ‘பத்து தல’ படத்தின் ரீமேக்கை ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சிலம்பரசனின் பஞ்ச் வசனங்கள் செம மாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். பத்து தல படத்தில் ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், மனுஷ்யபுத்திரன், கலையரசன், டிஜே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா ராவடி எனும் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பத்து தல திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி உள்ளது. சிம்பு ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் ஆடி பாடி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான ரோகிணியில், பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை திரையரங்கு ஊழியர்கள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் டிக்கெட் வைத்திருந்தும் ஊழியர்கள் உள்ளே விடாமல் அனுமதி மறுத்த நிலையில், சிம்பு ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரசிகர்கள், “பத்து தல படத்திற்காக ரோகினி திரையரங்கில் டிக்கெட் வாங்கி கொண்டு வந்த இருவரை உள்ளே விடாமல் ஊழியர்கள் தடுத்ததோடு அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். அவர்களின் உருவத் தோற்றத்தை மட்டுமே பார்த்து உள்ளே விடமாட்டோம் என்று சொல்வதெல்லாம்” என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

- Advertisement -

இதனிடையே டிக்கெட் வைத்திருந்தும் சாதிய தீண்டாமை காரணமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த பிரச்சனை நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என சென்னை ரோஹினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

Most Popular