Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentபூமிகாவுக்கு ஜோடியான நட்டி.. ஜெயம் ரவியின் ”பிரதர்” படத்தின் சீக்ரெட் அப்டேட்.. மீண்டும் ஒரு ”எங்கள்...

பூமிகாவுக்கு ஜோடியான நட்டி.. ஜெயம் ரவியின் ”பிரதர்” படத்தின் சீக்ரெட் அப்டேட்.. மீண்டும் ஒரு ”எங்கள் வீட்டுப் பிள்ளை தான்” போலயே!

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. அதற்கேற்றாற் போல் அவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்திற்கு பின் வந்த அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தின. இரு படங்களும் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தன.

- Advertisement -

இதனால் ஜெயம் ரவி அடுத்தடுத்து கதை தேர்வில் கவனமாக உள்ளார். அந்த வகையில் எஸ்எம்எஸ் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், தனி ஒருவன் – 2, ஜீனி என்று 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் முதலில் எஸ்எம்எஸ் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு பிரதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று அப்பட்டமாக தெரிய வந்தது. இருப்பினும் கதை காப்பியடிக்கப்பட்டிருக்காது என்று கூறப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அதேபோல் அக்கா தம்பி கதை என்று தலைப்பிலெயே தெரிய வந்ததால், அக்காவாக யார் நடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சரண்யா பொன்வண்ணன், சீதா, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் நட்டி, பூமிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் புகைப்படத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அண்மை காலங்களில் ஜெயம் ரவி த்ரில்லர் கதைகளிலேயே தொடர்ந்து நடித்து வந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் செண்டிமெண்ட் கதையில் நடித்து வருகிறார். அதேபோல் குடி, சிகரெட் ஆகியவற்றை விட்டு ஒரு வழியாக எம்.ராஜேஷ் செண்டிமெண்ட் கதை பக்கம் திரும்பியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நட்டி ஏற்கனவே எங்கள் வீட்டு பிள்ளை படத்தின் இதேபோன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular