Entertainment

நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர் என்ன? இணைந்து அறிவித்த ஜோடி.. வாழ்த்தும் ரசிகர்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை வைத்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் ஜோடியாக வலம்வந்த இருவரும், 2021ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து அக்டோபர் மாதம் வாடகைத்தாய் முறையில் 2 ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினர். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், திருமணத்திற்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்துகொண்டதாக விளக்கம் அளித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Advertisement

நயன்தாராவுடனும், குழந்தைகளுடனும் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் அவ்வப்போது பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார். அண்மையில்கூட இருவரும் குழந்தைகளுடன் விமானநிலையத்திற்குள் சென்ற வீடியோ ஒன்று வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் உயிர், உலகம் என விக்னேஷ் சிவன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அண்மையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தனது மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெயர் வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். அதோடு இருவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top