Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentசூர்யா43 அப்டேட்.. துல்கர் சல்மான், விஜய் வர்மாவை தொடர்ந்து நஸ்ரியாவும் ஒப்பந்தம்.. சுதா கொங்கரா சம்பவம்...

சூர்யா43 அப்டேட்.. துல்கர் சல்மான், விஜய் வர்மாவை தொடர்ந்து நஸ்ரியாவும் ஒப்பந்தம்.. சுதா கொங்கரா சம்பவம் உறுதி!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வரும் கங்குவா படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா படானி, யோகி பாபு, கோவை சரளா, சன்னி தியோல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்திற்கு பின் நடிகர் சூர்யா சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவுடன் மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார். சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சூர்யா – சுதா கொங்கரா மீண்டும் இணையும் படத்தின் பணிகள் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் ஏற்கனவே இளம் நடிகர் துல்கர் சல்மான் இணைந்திருந்தார். கிங் ஆஃப் கொத்தா படத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்ட போது அவரை இதனை ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் தமன்னாவின் காதலரான விஜய் வர்மாவும் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளார்.

- Advertisement -

தற்போது இந்தப் படத்தின் நடிகர் நஸ்ரியாவும் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானியுடன் இணைந்து அடடே சுந்தரா படத்தில் நஸ்ரியா நடித்திருந்தார். அதன்பின் எந்தப் படத்தின் நஸ்ரியா நடிக்கவில்லை. தற்போது சூர்யாவுடன் நஸ்ரியா நடிக்கவுள்ளது கோலிவுட்டை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதேபோல் இந்தப் படத்தில் சூர்யா கல்லூரி இளைஞராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத எழுத்து படத்தில் நடித்த ஆக்ரோஷமான இளைஞரை போன்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இதற்காக சூர்யா மீண்டும் உடல் எடையை குறைக்க முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular