Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணையும் திருச்சிற்றம்பலம் கூட்டணி.. தனுஷின் 50வது படத்தில் ஜோடியான நித்யா மேனன்.. தீவிரமாக நடக்கும்...

மீண்டும் இணையும் திருச்சிற்றம்பலம் கூட்டணி.. தனுஷின் 50வது படத்தில் ஜோடியான நித்யா மேனன்.. தீவிரமாக நடக்கும் படப்பிடிப்பு!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர்.ஜவஹர். அண்மையில் இயக்கத்தில் தனுஷ் நடித்த் திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்தது. ஆக்‌ஷன் படங்களும், கமர்ஷியல் படங்களுமே அதிகமாக வசூலித்து வந்த நிலையில், திடீரென ஃபீல் குட் வகையிலான திருச்சிற்றம்பலம் படம் ஹிட்டடித்து வசூலித்தது ஆச்சரியமளித்தது.

- Advertisement -

இந்த படத்தில் தனுஷ் மட்டுமல்லாமல் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். சண்டைக்கு பயந்த சாதாரண பையனாக, காதலித்து கண்ணீர்விடும் சூப் பாயாக தனுஷ் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல் அனிருத் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருவதோடு, இயக்கியும் வருகிறார். இதில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தனுஷ் மும்முரமாக படப்பிடிப்பை நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தில் தனுஷ் கோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நித்யா மேனன் – தனுஷ் தொடர்பான சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் மீண்டும் தனுஷ் – நித்யா மேனன் ஜோடி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தனது 50வது படத்திற்காக மொட்டையடித்து வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular