சினிமா

சூரரைப் போற்று, பரியேறும் பெருமாள், .கர்ணன் போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் ஈர்த்த பூ ராமு உடல்நலக்குறைவால் காலமானார்

2008 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான பூ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராமு நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவரது பெயருக்கும் முன்னால் பூ என்கிற பெயரையும் இணைத்துக் கொண்டார். அது திரைப்படம் முதல் பூ ராமு என்று அனைவராலும் அவர் அழைக்கப்படுவார்.

அன்பே சிவம் திரைப்படத்தில் அவர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்திருக்கிறார் இருப்பினும் பூ படம் வெளியான பின்பு அவர் அனைவர் கவனத்தையும் தனது நடிப்பால் ஈர்த்தார். அதன் பின்னர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், சூரரைப்போற்று, கர்ணன் என பல பெரிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கட்டி போடும் ஆற்றல் பெற்றவர். தற்பொழுது கூட அவர் நிறைய படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் சென்னையில் திடீரென நேற்று உடல்நலக்குறைவால் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார்.

கம்பீரமான குரல், எவ்வித உணர்ச்சி என்றாலும் அதை மிக இலகுவாக எதார்த்தமாக தனது முகத்தில் காட்டக்கூடிய அவரது நடிப்பை இனி நம்மால் பார்க்க இயலாது. தமிழ் சினிமாவில் எப்போதும் அவர் சிறந்த குணச்சித்திர நடிகராக காணப்படுவார். அவரது இழப்புக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top