Entertainment

“பாலிவுட் அரசியலால் என்னை ஒதுக்கினார்கள்” பிரியங்கா சோப்ராவால் மீண்டும் தொடங்கிய பாய்காட் பாலிவுட்.. நடிகர்களை வெளுக்கும் ரசிகர்கள்..!

பாலிவுட்டில் தான் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டதாக நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் ஏன் ஹாலிவுட்டுக்கு சென்றேன்? என்பது குறித்தும், கருமுட்டையை ஏன் சேமித்து வைத்தேன்? என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா, 2002ஆம் ஆண்டு தமிழன் படம் மூலம் சினிமாத்துறையில் கால்பதித்தார். அதன்பிறகு பாலிவுட்டில் The Hero: Love Story of a Spy என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகையானார். ஹாலிவுட்டிலும் கால்பதித்து பிரபலமான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்கள், தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் ஹாலிவுட்டிற்கு ஏன் சென்றேன் என்ற காரணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். “பாலிவுட் திரையுலகில் என்னை ஒரு மூலையில் ஒதுக்கினார்கள். சிலர் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அவர்களுக்கும் எனக்கும் பிரச்னை இருந்தது. அங்கு நடந்த அரசியலில் இருந்து எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்றினேன். அடுத்த கட்டத்திற்கு செல்ல அந்த இசை எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது” என பதில் அளித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே இருக்கும் பிரியங்கா சோப்ரா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.

Advertisement

வாடகைத்தாய் முறை குறித்தும் வெளிப்படையாக பேசிய பிரியங்கா, “எனது தாயின் ஆலோசனையின் பேரில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள 30களின் தொடக்கத்தில் கருமுட்டையை சேமித்து வைத்தேன். எனது கரியரில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதால் இதைச் செய்தேன்” என கூறியிருக்கிறார்.

மேலும் பாலிவுட்டில் நடக்கும் அரசியல் குறித்து பிரியங்கா சோப்ரா தற்போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒதுக்கப்பட்டதற்கு காரணம் கரண்ஜோகர் தான் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். ஆனால் தனது பேட்டியில் பிரியங்கா சோப்ரா அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் பாலிவுட்டில் அரசியல் இருப்பதாக தொடர்ந்து பலரும் குற்றம்சாட்டிவரும் நிலையில், பிரியங்கா சோப்ராவும் அதுபற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் Boycott Bollywood என்ற சர்ச்சை இன்னும் நீடிப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top