Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentமொட்டை தலை.. கறுப்பு கண்ணாடி.. வாயில் சிகரெட்.. மாஸாக இருக்கும் மாமன்னன் ரத்னவேலு.. புஷ்பா படக்குழுவின்...

மொட்டை தலை.. கறுப்பு கண்ணாடி.. வாயில் சிகரெட்.. மாஸாக இருக்கும் மாமன்னன் ரத்னவேலு.. புஷ்பா படக்குழுவின் சர்ப்ரைஸ் போஸ்டர்!

”அலவைக்குந்தபுரமலோ” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், நடிகர் அல்லு அர்ஜூன் சுகுமார் இயக்கத்தில் நடித்த திரைப்படம் புஷ்பா. செம்மரக் கடத்தலையும், அதன் பின்னணியை வைத்து அல்லு அர்ஜூனின் வளர்ச்சியை படப்பிடித்த சுகுமாரின் புஷ்பா இந்தியா முழுக்க பட்டித்தொட்டியெங்கும் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் படத்தை பார்த்த பின் கிரிக்கெட் வீரர்களும் புஷ்பா ஸ்டைலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அளவிற்கு புஷ்பாவின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதேபோல் பிரபாஸ்-க்கு பின் பான் இந்தியா ஸ்டாராக அல்லு அர்ஜூனை புஷ்பா திரைப்படம் உயர்த்தியது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனுசுயா பரத்வாஜ், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தில் பெரும்பாலும் புஷ்பாவின் வளர்ச்சியே காட்டப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் வில்லனாக வந்த ஃபகத் ஃபாசில் ஒற்றை வார்த்தையில் மிரட்டிவிட்டார். இதனால் புஷ்பா இரண்டாம் பாகத்தில் ஃபகத் ஃபாசிலின் காட்சிகள் பிரமிக்க வைக்கும் என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதனிடையே அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடக்யே பிரமிப்பை ஏற்படுத்தியது. புஷ்பா கொல்லப்பட்டாரா என்ற கேள்வியுடன் தொடங்கிய டீசரின் இறுதியில், புலியே புஷ்பாவை பார்த்த பயப்படுவதாக அமைக்கப்பட்ட காட்சிகள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அந்த டீசரில் ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் ஃபகத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மொட்டை தலையுடன் கண்ணாடி அணிந்தவாறு சிகரெட் பிடிக்கும் புகைப்படம் மாஸாக அமைந்துள்ளது.

கழுத்தில் தாயத்து, உடலில் பத்தாத சட்டை என்று வித்தியாசமான லுக்கில் ஃபகத் ஃபாசில் இருக்கிறார். இதனால் புஷ்பா இரண்டாம் பாகத்தில் ஃபகத் ஃபாசிலின் முழு சேட்டையும் வெளிப்படும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லமால் இந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உடனடியாக ட்ரெண்ட் செய்ய தொடங்கிவ்ட்டனர்.

Most Popular