Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ படத்தை முதல் நாளிலேயே ரஜினிகாந்த் பார்த்துவிட்டார்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க.. தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

லியோ படத்தை முதல் நாளிலேயே ரஜினிகாந்த் பார்த்துவிட்டார்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க.. தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ”லியோ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் எல்சியூ-வில் இணைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் லியோ படத்தை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

அதேபோல் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் லியோ படத்தை ஆவலாக பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் லியோ படத்தின் வசூல் அனைத்து படங்களின் வசூலையும் விடவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.148.5 கோடியாக உள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரின் பிராண்ட் வேல்யூ நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரிதாக எவ்வித புரமோஷனும் இல்லாமலேயே லியோ படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

- Advertisement -

கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் வசூலை அது பாதிக்கவில்லை. இந்த நிலையில் லியோ படம் வெளியாகிய முதல் நாளிலேயே நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்தார். இதனை தொடர்ந்து படத்தை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் குமார் கூறும் போது, முதல் நாளிலேயே நடிகர் ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்.

- Advertisement -

உடனடியாக என்னையும் தொடர்பு கொண்டு படத்தை பாராட்டியதோடு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டை பெற்றதே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து நீடித்து வரும் நிலையில், விஜய் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular