Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாசங்கி என்பது கெட்ட வார்த்தை கிடையாது- ரஜினிகாந்த் புது கருத்து.. முழு பேட்டி விவரம்

சங்கி என்பது கெட்ட வார்த்தை கிடையாது- ரஜினிகாந்த் புது கருத்து.. முழு பேட்டி விவரம்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரஜினி படங்கள் என்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகும்.

- Advertisement -

ஆனால் ஜெயிலர் என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த பிறகும் லால் சலாம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. இதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் மட்டும் தான் வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றது தமிழக மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

மேலும் தற்போது அவர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினியின் மகளும் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சங்கீ கிடையாது என்றும் ஒரு சங்கியால் இந்த படத்தை நடிக்க ஒப்புக் கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள், நடிகர் ரஜினியிடம் ஐஸ்வர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனது பேச்சில் எங்கேயுமே சங்கி என்றால் ஒரு கெட்ட வார்த்தை என்று கூறவில்லை. தன்னுடைய தந்தை அனைத்து மதத்தையும் விரும்பக் கூடியவர் .அனைத்தையும் ஒன்றாக பார்ப்பவர் என்றுதான் கூறியிருந்தார். தாம் ஒரு ஆன்மீகவாதி என்பதை மீண்டும் ஐஸ்வர்யா தெளிவுபடுத்து இருந்தார்.

லால் சலாம் திரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்காக இதுபோன்ற சர்ச்சைகள் எழுப்பப்படுகிறதா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. லால் சலாம் திரைப்படம் நன்றாக வந்துவிட்டது. படம் மத நல்லிணக்கத்தை பற்றி பேசக் கூடியதாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Most Popular