Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஏ.எல்.விஜய் உடன் கூட்டணி அமைத்த மாதவன் - கங்கனா.. படப்பிடிப்பில் கங்கனாவை சந்தித்த ரஜினிகாந்த்.. திடீரென...

ஏ.எல்.விஜய் உடன் கூட்டணி அமைத்த மாதவன் – கங்கனா.. படப்பிடிப்பில் கங்கனாவை சந்தித்த ரஜினிகாந்த்.. திடீரென சூப்பர் ஸ்டார் வந்தது ஏன்?

ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதில் வெறும் கேமியோ கதாபாத்திரம் என்றாலும், அரை மணி நேரம் வரை ரஜினிகாந்த் வருவார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ராணா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 45 வயது மதிக்கப்பட்ட மனிதராக நடிக்கிறார். அவரின் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் மாதவன், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிக்கும் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

- Advertisement -

இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கப்படுகிறது. இசையமைப்பாளராஜ ஜிவி பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படப்பிடிப்பு தொடங்கிய போது, ரஜினிகாந்த் படத்தின் ஷூட்டிங்கும் அருகிலேயே நடைபெற்றுள்ளது. இதையடுத்து நடிகை கங்கனா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கங்கனா – ரஜினிகாந்த் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

Most Popular