Sunday, April 6, 2025
- Advertisement -
HomeEntertainmentசூப்பர் ஸ்டார் - லோகேஷ் கனகராஜ் காமினேஷன் எப்படி இருக்கும்… தலைவரே கொடுத்த பதில் இதோ...

சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் காமினேஷன் எப்படி இருக்கும்… தலைவரே கொடுத்த பதில் இதோ உங்களுக்காக..

லியோ திரைப்படத்தில் தற்போது பிஸியாக வேலை செய்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணையும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின் கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர்.

- Advertisement -

சென்னை காஷ்மீர் தலக்கோணம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது போஸ்ட் ப்ரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்கான பணிகளை படக்குழு தீவிர்படுத்தி உள்ளது. இதேபோல் லியோ படத்திலிருந்து தெலுங்கு போஸ்டர் இன்று வெளியானது. அடுத்தடுத்த நாட்களில் போஸ்டர்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். இவர் டப்பிங் பணியில், ஈடுபட்ட வீடியோவை லைக்கா தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினி என்கிறார். என்கவுனருக்கு எதிராக எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் அவர் ஓய்வு பெற்ற அதிகாரியாக நடிப்பதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இது போக பகத் பாஸில், மலையாள நடிகை மஞ்சுவாரியர், தெலுங்கு நடிகர் ராணா ஆகியோரின் படத்தில் உள்ளார்களாம். இதற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கோவையில் தனது பெயரின் காது குத்து விழாவிற்கு சென்ற ரஜினியிடம், லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், எனது 171 வது படம் நன்றாக வரும். ஆனால் முதலில் அந்தப் படம் ரிலீஸ் ஆகாது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் நான் இணையும் படம் தான் முதலில் வெளியாகும் என்று கூறினார். ரஜினியின் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular