Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. மீண்டும் திரையரங்கில் வெளியாகும் முத்து.. தேதி அறிவிப்பு

ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. மீண்டும் திரையரங்கில் வெளியாகும் முத்து.. தேதி அறிவிப்பு

பழைய படங்கள் மற்றும் கொண்டாடத் தவறிய படங்கள் கடந்த சில வருடங்களாக ரீ ரீலீஸ் ஆவது வழக்கமாகிவிட்டது. அவை எம்.ஜி.ஆர் படங்கள் முதல் செல்வராகவனின் ஆயிரத்தில் வரை. இந்தப் பட்டியலில் அடுத்ததாக ரஜினியின் முத்து திரைப்படம் இணைய உள்ளது.

- Advertisement -

ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதா ரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு, பொன்னம்பலம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் முத்து. இத்தகு ஜெமீன், கிராம கதைகளை சிறப்பாக கையாளுவதில் பெயர் போனவர் ரவிகுமார். ரஜினிகாந்த்தின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டாக இப்படம் அமைந்தது.

இன்றும் சன்.டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்பட்டால் அனைவரும் அமர்ந்து பார்க்கும் குடும்பங்கள் பல உள்ளன. எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காது என்ற பெருமையையும் பெற்றுள்ளது. காமெடி, காதல், பாடல்கள், குடும்ப சென்டிமென்ட் என ஓர் கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வரைபடமாக திகழ்கிறது.

- Advertisement -

இத்தகு பெருமைகளை கொண்ட திரைப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரீ ரீலீஸ் ஆகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை கொண்டு வந்திருந்தாலும் தமிழக மக்களுக்கு சிறிய அதிர்ச்சி. அதாவது ரஜினியின் முத்து திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி தெலுங்கில் மட்டுமே வெளியாக ஒப்பந்தம் ஆகியுள்ளது.

- Advertisement -

தமிழகத்தில் எந்தவித வெளியீடும் இல்லை. ஒரு வேளை தெலுங்கில் நல்ல லாபம் பெற்றால் தமிழிலும் வெளியிட வாய்ப்புள்ளது. இதே போலத் தான் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இரு மாதங்களுக்கு முன் தெலுங்கில் மட்டும் வெளியாகியது. ஆந்திராவில் நல்ல கொண்டாடத்தைத் தொடர்ந்து டிசம்பரில் தமிழில் வெளியாகும் என அறிவித்தனர்.

இந்த வருடம் ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமலின் வேட்டையாடு விளையாடு, சசிகுமாரின் சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல கூட்டத்தைக் கண்டது. கமலின் பஞ்சதந்திரம் மற்றும் நாயகன் அடுத்து ரீ ரீலீசுக்கு காத்திருக்கிறது. ரஜினியின் சில தரமான படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular