Sunday, September 15, 2024
- Advertisement -
HomeEntertainmentஎங்கிருந்துயா இப்படி கதையெல்லாம் பிடிக்கிற.. சிவகார்த்திகேயன் பாராட்டிய ரஜினிகாந்த்.. இதுதாங்க சூப்பர்ஸ்டார்!

எங்கிருந்துயா இப்படி கதையெல்லாம் பிடிக்கிற.. சிவகார்த்திகேயன் பாராட்டிய ரஜினிகாந்த்.. இதுதாங்க சூப்பர்ஸ்டார்!

”மண்டேலா” படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் மாவீரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா, சுனில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார்.

- Advertisement -

கோழை எப்படி வீரன் ஆகிறான் என்பதை மையமாக வைத்து, பெருநகரங்களில் ஏழை மக்கள் குப்பத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் படும் அவஸ்தையையும், அதிலிருந்து மக்களை எப்படி சிவகார்த்திகேயன் காப்பாற்றுகிறார் என்பதை வைத்து கதை உருவாக்கப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் நடிகராகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

அதேபோல் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பின் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் மூலம் பெரும் வெற்றியை கண்டுள்ளார். இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தெலுங்கிலும் ரவி தேஜா குரல் கொடுத்திருந்ததால், ரசிகர்கள் பலரும் மாவீரன் படத்திற்கு வரவேற்பளித்திருந்தனர்.

- Advertisement -
Maaveeran pre business

இந்த நிலையில் மாவீரன் படம் நாளை மறுநாள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாவீரன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் எங்கள் அனைவரையும் செல்போனில் அழைத்து பாராட்டினார்.

- Advertisement -

யாரை பார்த்து சினிமாவுக்குள் வந்தேனோ, யாருக்கு பேனர் வைத்து கொண்டாடினேனோ, அவர் நமது படத்தை பார்த்து பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கிருந்து இப்படியான கதை பிடிக்கிறீர்கள் என்றும் கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் நாளை ஜெயிலர் படம் ரிலீஸாக உள்ளது. இந்த டென்ஷனிலும் ரஜினிகாந்த் மாவீரன் படம் பாராட்டியது தான் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெயிலர் படமும் நிச்சயம் பெரு வெற்றியடையும். மாவீரன் படக்குழு சார்பாக அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயிலர் படம் வெற்றியடைய வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் தலைவா.. எப்போதும் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான். இதை எங்கு கேட்டாலும் நான் சொல்லுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular