Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயிலரை முதன் முறையாக பார்த்த ரஜினிகாந்த்… படம் பார்த்து விட்டு தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?

ஜெயிலரை முதன் முறையாக பார்த்த ரஜினிகாந்த்… படம் பார்த்து விட்டு தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என உறுதியுடன் இருந்த நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்தார். அந்த சமயத்தில் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நெல்சன் உடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி இருந்தது.

- Advertisement -

ஆனால் அனைத்து வதந்திகளையும் அனைத்து நொறுக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உடன் இணைவதில் உறுதியாக இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ஜெயிலரில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஜராஃப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா, காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சமீபத்தில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தில் இருந்து இரண்டாம் பாடலான டைகர்கா ஹுக்கும் பாடல் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினிக்கு உண்டான பாடல் வரிகள் இடம் பெற்று பலரையும் கவர்ந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயிலர் படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளையே வைத்து நம்பி எடுக்கப்பட்டிருப்பது, ட்ரெய்லரை காணும் போது நன்றாக தெரிவதாக ரசிகர்கள் கூறினர். ட்ரெய்லர் கொடுத்த தாக்கத்தால் ஜெயிலரின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

- Advertisement -

இதுவரை ரஜினி படத்திற்கு இல்லாத அளவுக்கு, ப்ரீ புக்கிங் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதன் நடுவே, ஜெயிலர் படத்தை முதல்முறையாக ரஜினி பார்த்திருக்கிறார். அவருடன் நெல்சன் மற்றும் படத்தில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் இணைந்து பார்த்ததாக கூறப்படுகிறது. படம் ரஜினிக்கு மிகுந்த திருப்தியை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular