Friday, December 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்… வந்துட்டாரு முத்துவேல் பாண்டியன்… பீஸ்ட்...

ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்… வந்துட்டாரு முத்துவேல் பாண்டியன்… பீஸ்ட் வாடை ஹெவியா அடிக்குதே நெல்சா!

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என உறுதியுடன் இருந்த நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்தார். அந்த சமயத்தில் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நெல்சன் உடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி இருந்தது.

- Advertisement -

ஆனால் அனைத்து வதந்திகளையும் அனைத்து நொறுக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உடன் இணைவதில் உறுதியாக இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ஜெயிலரில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஜராஃப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா, காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சமீபத்தில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தில் இருந்து இரண்டாம் பாடலான டைகர்கா ஹுக்கும் பாடல் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினிக்கு உண்டான பாடல் வரிகள் இடம் பெற்று பலரையும் கவர்ந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது, ஜெயிலில் படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளையே வைத்து நம்பி எடுக்கப்பட்டிருப்பது, ட்ரெய்லரை காணும் போது நன்றாக தெரிகிறது. மலையாள நடிகர் விநாயகம், டைகர் முத்துவேல் பாண்டியன் என கூறும் போது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மூமெண்ட் கொடுக்கிறது. ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான் உள்ளிட்ட வசனங்கள் ரஜினிக்கு உண்டான மாஸ் ஸ்டைலில் உள்ளன.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, படம் அப்படியே பீஸ்ட் சாயலில் இருப்பதாக சிலர் குறை கூறி வருகின்றனர். அந்தப் படத்தில், தெரியாமல் குழந்தையை சுட்டுக் கொல்லும் விஜய் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவார். இதிலேயும் ரஜினிகாந்த்துக்கு ஏதோ மன நோய் இருப்பது போல நெல்சன் காட்சிகளை வைத்திருக்கிறார். இதனால் படமும் பீஸ்ட் மாதிரியே வந்து விடுமோ என்ற பதற்றத்தில் ரஜினி ரசிகர்கள் பம்மி போய் உள்ளனர்.

Most Popular