Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஏய்… இங்க நான்தான் கிங்… நான் வச்சதுதான் ரூல்ஸு… ஹுக்கும்னு சொல்லி மிரட்டும் சூப்பர் ஸ்டார்…...

ஏய்… இங்க நான்தான் கிங்… நான் வச்சதுதான் ரூல்ஸு… ஹுக்கும்னு சொல்லி மிரட்டும் சூப்பர் ஸ்டார்… தெறிக்கும் ஜெயிலர் ப்ரோமோ

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திலிருந்து டைகர்கா ஹுக்கும் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

- Advertisement -

அண்ணாத்த ரஜினியும், பீஸ்ட் நெல்சனும்

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் உறுதியுடன் இருந்த நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்தார். அந்த சமயத்தில் விஜய் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நெல்சன் உடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி இருந்தது.

ஆனால் அனைத்து வதந்திகளையும் அனைத்து நொறுக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உடன் இணைவதில் உறுதியாக இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ஜெயிலரில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஜராஃப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா, காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சமீபத்தில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. தற்போது காவாலையா பாடலை பல்வேறு நடிகைகளும் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தில் இருந்து இரண்டாம் பாடலான டைகர்கா ஹுக்கும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நான்தான் கிங்குனு மிரட்டும் ரஜினிகாந்த்

இந்நிலையில், டைகர்கா ஹூக்கும் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சுமார் 50 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், நான்தான் கிங்கு… நான் வச்சதுதான் ரூல்ஸுனு ரஜினியின் கர்ஜிக்கும் குரலில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மரண மாஸாக அமைந்துள்ளது. ப்ரோமோவை பார்த்து சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், நெல்சனுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

காவாலய்யா பாடலில் தமன்னாவையே முன்னிலை படுத்தி எடுத்துள்ளதாகவும், ரஜினியை மதிக்கவில்லை என்றும் கோபப்பட்ட தலைவர் ரசிகர்களுக்கு, இந்த ப்ரோமோ வீடியோ இனிப்பாக அமைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Most Popular