Friday, March 29, 2024
- Advertisement -
HomeEntertainment"கேம் சேஞ்சர்" ராம் சரண் - ஷங்கர் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. அரசியல் கதைக்களம் தான்.....

“கேம் சேஞ்சர்” ராம் சரண் – ஷங்கர் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. அரசியல் கதைக்களம் தான்.. உறுதிசெய்த படக்குழு..!

இயக்குநர் ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் உருவாகிவரும் பிரமாண்ட படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு ஹீரோ ராம்சரணுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி.15 என பெயரிட்டிருந்தனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைத்து வருகிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் ராம்சரணின் பிறந்தநாளான இன்று, ஆர்.சி.15 படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயரிட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்கு முன்னர் இந்த படத்திற்கு சி.இ.ஓ என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இதற்கிடையேதான், யாரும் எதிர்பார்க்காதபடி படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயரிட்டு ராம்சரண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

- Advertisement -

முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமான கேம் சேஞ்சரில், அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் டைட்டிலை பார்த்து மகிழும் ரசிகர்கள், ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular