அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர நடித்துள்ள திரைப்படம் அனிமல். இந்த படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி முழுக்க தேவையில்லாத காட்சிகளே படமாக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல் ஆல்ஃபா மேல் என்று ரன்பீர் கபூர் பைத்தியக்கார இளைஞராகவும், வித்தியாச வித்தியாசமாக தொல்லைகளை ஏற்படுத்தி கொள்ளும் இளைஞராகவும் நடித்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதேபோல் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளில் ரன்பீர் கபூரையே ஓவர் டேக் செய்கிறார். இதனால் அர்ஜூன் ரெட்டி படத்தின் கதாபாத்திரத்தையே வேறு கதையில் பொறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பாலிவுட் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் வசூல் மிரட்டலாக அமைந்துள்ளது. அனிமல் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 116 கோடி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லியோ படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை என்றாலும், ரன்பீர் கபூர் சினிமா வாழ்க்கையில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.141 கோடியாகும்.
இந்த நிலையில் அனிமல் படத்தின் 2ஆம் நாள் வசூல் லியோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. 2வது நாள் முடிவில் அனிமல் திரைப்படம் மொத்தமாக ரூ. 236 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனிமல் படம் அடுத்த ஒரு வாரத்தில் லியோ மற்றும் ஜெயிலர் படத்தின் சாதனையை தகர்க்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஜவான் படத்தின் சாதனையை முறியடிக்க வாய்ப்புல்லை என்று கருதப்படுகிறது.