ஜெயிலர் படத்தில் பிரம்மாண்ட வெற்றியால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இதனால் அடுத்தடுத்து இளம் இயக்குநர்கள் கதையில் நடிக்க ரஜினிகாந்த் ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே கைதி 2 படத்தை இயக்க தயாரான லோகேஷ் கனகராஜை அழைத்து சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பிரம்மாண்ட சம்பளம் கொடுத்து படம் இயக்க கோரிக்கை வைத்தனர்.
இதனால் வேறு வழியின்றி லோகேஷ் கனகராஜ்-ம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க சம்மதித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. லியோ வெளியீட்டுக்கு ஒரு மாதத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தினார். இதனிடையே ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் இணையும் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. அதுமட்டுமல்லாமல் படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஷூட்டிங் இந்த வாரத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்குள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜிடம் ரஜினிகாந்த் பான் இந்தியா நடிகர்களை படத்தில் நடிக்க வைக்க கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி செய்தால் தான் இந்தியா முழுவதும் வசூல் செய்ய முடியும் என்று ஜெயிலர் ஃபார்முலாவை லோகேஷ் கனகராஜிற்கு கூறியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி லோகேஷ் கனகராஜ் ஓகே தெரிவித்துள்ளார். இதன்பின் பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரமான ரன்வீர் சிங்கிடம் லோகேஷ் கனகராஜ் கதை கூறியுள்ளார். இதுதொடர்பாக பாலிவுட் மீடியாக்கள் தொடர்ந்து செய்து வெளியிட்டுள்ளன. இந்த கதையில் 25 நிமிடங்கள் வரும் அளவிற்கு ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.