Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentஅடுத்த தெலுங்கு படத்துக்கு தயாராகும் தனுஷ்… ராஷ்மிகாவுடன் டூயட் வேற இருக்காம்… சரியா போச்சு போங்க

அடுத்த தெலுங்கு படத்துக்கு தயாராகும் தனுஷ்… ராஷ்மிகாவுடன் டூயட் வேற இருக்காம்… சரியா போச்சு போங்க

நடிகர் தனுஷ் – தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இணையும் படத்தில், ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அடுத்தடுத்த படங்களில் பிஸியான தனுஷ்

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனுஷின் பிறந்த நாளான வரும் 28 ஆம் தேதி அன்று, கேப்டன் மில்லரின் டீசர் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுத்து வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

வடசென்னையில் கேங்ஸ்டர் படம்

இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் சந்திப் கிசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாராம். தனுசுக்கு தங்கை வேடத்தில் துசாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக, சென்னை ஈ சி ஆர் சாலையில் 600 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

தனுஷுடன் இணையும் ராஷ்மிகா

இதனிடையே வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டு, பட பூஜையில் நடைபெற்றது. அதன் பிறகு, படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் சேகர் கம்முலா படத்தில், நாகர்ஜுனுக்கு முக்கிய ரோல் இருப்பதாக புதிய தகவல் கசிந்துள்ளது. மேலும் தனுசுக்கு ஜோடியாக நடிக்க, ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இந்த படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular