கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, அதன்பின் டியர் காம்ரேட், சரிலேரு நீக்குயெவறு உள்ளிட்ட படங்கள் மூலமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். தொடர்ந்து பீஷ்மா, சுல்தான் மற்றும் புஷ்பா படங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் அவருக்கு புகழை தேடி கொடுத்தது.
இதனால் இந்தியில் குட் பாய், தமிழில் விஜய் உடன் வாரிசு, இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களால் இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்தார் ராஷ்மிகா. இதுமட்டுமல்லாமல் ஒரே நாட்டிற்கு விடுமுறைக்கு சென்று ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் புகைப்படங்களை வெளியிட சோசியல் மீடியாவே பற்றிக் கொண்டது.
இந்த நிலையில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் அவரின் மார்க்கெட் மொத்தமாக மாற்றியுள்ளது. இந்த படத்திற்கு பின் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவின் அத்தனை நாயகர்களுடனும் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் ராஷ்மிகா தனது சம்பளத்தை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளார்.
இதனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் ராஷ்மிகாவை நடிக்க வைக்க வேண்டாம் என்றே முடிவுக்கு வந்துள்ளனர். இதனையும் கடந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்க் ராஷ்மிகாவை நாயகியாக்க படக்குழு திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதையடுத்து கதையை கேட்ட ராஷ்மிகா, சம்பள விஷயத்தில் கறார் காட்டியுள்ளார்.
ஏற்கனவே சுல்தான் படத்தில் நடித்த போது சம்பள பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாத ராஷ்மிகா, இப்படி மாறிவிட்டாரே என்று தயாரிப்பாளர்கள் அப்படியே ரிட்டர்னாகியுள்ளனர். இதனால் ராஷ்மிகாவின் மார்க்கெட் குறைந்த பின் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பி வருவார் என்று பார்க்கப்படுகிறது.