Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை வம்பு இழுத்த இயக்குனர் ரத்னகுமார்… இதெல்லாம் தேவையில்லாத...

லியோ பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை வம்பு இழுத்த இயக்குனர் ரத்னகுமார்… இதெல்லாம் தேவையில்லாத வேலை ப்ரோ என ரசிகர்கள் கமெண்ட்…

- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், மாஸ்டர் திரைப்படத்தைப் போல கலவையான விமர்சனத்தை ஏற்பட்டது. இருப்பினும் இந்த திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். படம் வெளியான ஒரே வாரத்திலேயே 461 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது.

தற்போது வரை 600 கோடி ரூபாய் அளவுக்கு லியோ திரைப்படம் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாதியில் தேவையில்லாத அந்த நரபலி காட்சியை தூக்கி இருக்கலாம் என்றும், அந்தக் காட்சி எதற்காக வைக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு சமீபத்தில் பதில் கூறிய லோகேஷ் கனகராஜ், பிளாஷ்பேக் காட்சிகள் அனைத்தும் பொய் என்று கூறி நம்மை அதிர வைத்தார்.

- Advertisement -

மன்சூர் அலிகான் பார்வையில் இருந்து தான் அந்த காட்சிகள் விரிவடையும் என்றும், அது உண்மை அல்ல என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் புருடா விடுவதாக கமெண்ட் அடித்தனர். இரண்டாம் பாதி நன்றாக வரவில்லை என்பதற்கு இப்படி ஒரு காரணமா என்றும் அவரை கிண்டல் செய்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பேச்சை படக்குழு வெளியிட்டது. அதில் லோகேஷ் கனகராஜ் கூறியபடியே, இதை என்னுடைய பார்வையில் இருந்துதான் கூற ஆரம்பிக்கிறேன் என்று தெரிவித்து பிளாஷ்பேக் காட்சியை அவர் கூறுகிறார்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், லியோ படத்தில் பணிபுரிந்த இயக்குனர் ரத்னகுமார் பேசியதாவது, நான் சினிமாவிற்கு வருவதற்கு மிகப்பெரிய காரணம் விஜய் சார் தான். என்னுடைய இளம் வயது பருவத்தை நான் விஜய் ரசிகனாக தான் தொடங்கினேன். மாஸ்டர் திரைப்படத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து, வாத்தி ரெய்டு பாடலை எழுதினேன். அந்த படப்பிடிப்பு சமயத்தில் நெய்வேலியில் ஐடி ரெய்டுகாக வந்திருந்தது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் எவ்வளவு உயர பறந்தாலும் பசிக்குதுனா கீழ வந்துதான் ஆகனும் என்று ரத்தினகுமார் பேசினார். அவரின் இந்த கருத்து தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பருந்து ஆகாயத்தில் மிக உயரமான இடத்தில் பறக்கும் என்றும், காகம் அதனை சீண்ட முயற்சித்தாலும் அதனால் பருந்தின் உயரத்திற்கு பறக்க முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் காகம் என்பதை விஜயை தான் குறிப்பிடுகிறார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இப்படியான சூழலில் தான், ரத்னகுமார் எவ்வளவு உயர பறந்தாலும் கீழே வரவேண்டும் என்று பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை சூடாக்கி உள்ளது.

Most Popular