Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயிலர், லால் சலாம் பட வேலைகளை விறுவிறுப்பாக முடித்த சூப்பர் ஸ்டார், மாலத்தீவுகளுக்கு திடீர் பயணம்…...

ஜெயிலர், லால் சலாம் பட வேலைகளை விறுவிறுப்பாக முடித்த சூப்பர் ஸ்டார், மாலத்தீவுகளுக்கு திடீர் பயணம்… என்ன காரணம் தெரியுமா?

ஜெயிலர், லால் சலாம் பட வேலைகளை முடித்துள்ள ரஜினிகாந்த், ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

நெல்சனுடன் உறுதியான கூட்டணி

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் உறுதியுடன் இருந்த நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்தார். அந்த சமயத்தில் விஜய் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நெல்சன் உடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி இருந்தது.

ஆனால் அனைத்து வதந்திகளையும் அனைத்து நொறுக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உடன் இணைவதில் உறுதியாக இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ஜெயிலரில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஜராஃப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா, காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சமீபத்தில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. தற்போது காவாலையா பாடலை பல்வேறு நடிகைகளும் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தில் இருந்து இரண்டாம் பாடலான டைகர்கா ஹுக்கும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மாலத்தீவில் சூப்பர் ஸ்டார்

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் நிலையில், தனது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் ரஜினி ஈடுபட்டு வந்தார். மும்பை, திருவண்ணாமலை பகுதிகளில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் முழுவதும் எடுக்கப்பட்டன. இனி படக் குழுவும் கேக் வெட்டி கொண்டாடியது.

இந்த நிலையில் ஜெயிலர், லால் சலாம் என அடுத்தடுத்து பட வேலைகளை முடித்துள்ள ரஜினிகாந்த், மாலத்தீவுக்கு பறந்துள்ளார். அவர் அங்கு சிறிது காலம் ஓய்வெடுக்க தான் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் பறக்க, அது தொடர்பான புகைப்படங்களை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Most Popular