Sunday, September 15, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடாமுயற்சியிலிருந்து திடீரென வெளியேறினாரா பிரபல நடிகை… அவருக்கு பதில் வேறொரு நடிகையை புக் செய்த மகிழ்...

விடாமுயற்சியிலிருந்து திடீரென வெளியேறினாரா பிரபல நடிகை… அவருக்கு பதில் வேறொரு நடிகையை புக் செய்த மகிழ் திருமேனி…

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. துணிவு படத்தின் சூட்டிங் நடக்கும் போது இந்த அறிவிப்பு வெளியானது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறினார். தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் இந்த முடிவை விக்னேஷ் சிவன் எடுத்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன்பிறகு அஜித் படத்தை யார் இயக்குவார் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, சுதா கொங்கரா, அட்லி, விஷ்ணுவரதன் உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டன. இந்த சமயத்தில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மகிழ் திருமேனி ப்ராஜெக்டிற்குள் வந்தார். அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி இதன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கு விடா முயற்சி என டைட்டில் வைக்கப்பட்டது.

ஆனால் டைட்டில் வைத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, படத்தை எடுப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் ஏற்படாமலேயே இருந்தது. மே மாதம் கடந்து ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் வரைக்கும் அஜித்தின் இந்த படம் குறித்த தகவல் அமைதியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் விடா முயற்சி கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் எண்ணினர். இந்த சமயத்தில் பேசிய லைக்கா நிறுவனம், விடாமுயற்சி நிச்சயம் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. படத்தின் சூட்டிங் இவ்வளவு தாமதமாவதற்கு அஜித் தான் காரணம் என்று கூறப்பட்டது.

- Advertisement -

அவர் வைக்க எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாடாக ஊர் சுற்றுவதால் ஷூட்டிங்கில் சுணக்கும் ஏற்பட்டிருப்பதாகவும், இது நடிகரிடம் கூற முடியாமல் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் திண்டாடி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது விடாமுயற்சியின் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் மகிழ் திருமேனி தொடங்கி இருக்கிறார். இதில் அஜித் குமார் கலந்துள்ளார். மேலும் நாயகி திரிஷா, மற்றும் வில்லன் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதுபோக படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஆரவ், பாலிவுட் நடிகை ஹீமா குரேசி ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியானது. இது ஹீமா குரேஷி ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் படத்தில் இருந்து விலகி இருப்பதாக பேசப்படுகிறது. அவருக்கு பதில் நடிகை ரெஜினாவை நடிக்க வைக்க மகிழ்திருமேனி திட்டமிட்டு இருக்கிறாராம். இவர் ஏற்கனவே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, மாநகரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular