Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentசமந்தாவின் அழகு மட்டுமே ஒரே ஆறுதல்.. ரசிகர்கள் பாவமில்லையா கோபால்.. சாகுந்தலம் படம் எப்படி இருக்கு?...

சமந்தாவின் அழகு மட்டுமே ஒரே ஆறுதல்.. ரசிகர்கள் பாவமில்லையா கோபால்.. சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? பார்க்கலாம் வாங்க!

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் புராண கால கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள சாகுந்தலம் திரைப்படம் தமிழ் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

விஸ்வாமித்ரருக்கும் மேனகைக்கும் பிறந்த பெண் குழந்தையை மேனகை ஒரு காட்டில் விட்டு விடுகிறார். அந்த குழந்தை ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்தில் இயற்கை மற்றும் வன விலங்குகளுடன் வளர்கிறாள். அந்த குழந்தை தான் சகுந்தலா. ஒருநாள் அந்த காட்டுக்கு வேட்டையாட வரும் ராஜா துஷ்யந்தன் சகுந்தாலவை பார்த்த நொடியிலேயே காதல் கொள்கிறான்.

சகுந்தலாவுக்கும் துஷ்யந்தனை பிடித்துப்போக இருவரும் இயற்கையை சாட்சியாக வைத்து கந்தர்வ திருமணம் செய்து விடுகின்றனர். சகுந்தலாவை விட்டு நாட்டுக்கு திரும்பவேண்டிய சூழலில் நிச்சயம் திரும்பி வந்து உன்னை என் நாட்டுக்கு ராணியாக அழைத்துச் செல்வேன் என துஷ்யந்தன் வாக்கு கொடுத்து விட்டு சகுந்தலாவை பிரிகிறான்.

- Advertisement -

ஆனால், அவன் திரும்பி வரவே இல்லை. துஷ்யந்தனுக்கு உன் நினைவு வராது என முனிவர் ஒருவர் சாபம் கொடுக்க, சகுந்தலாவை பற்றிய நினைவுகளை இழந்தான் துஷ்யந்தன்‌. இறுதியில் சகுந்தலாவின் காதலை ஏற்றானா? இல்லையா? என்பதுதான் கதை.

- Advertisement -

இதற்கு முன்னரே நிறைய படங்கள் இதே புராணக்கதையை வைத்து வந்திருக்கின்றன. சில டிவி தொடர்களும் பல்வேறு மொழிகளில் வந்துள்ள நிலையில், அதனை இந்த கால ரசிகர்களுக்கு புரியும் வகையில் குணசேகரன் படமாக கொடுத்துள்ளார். நடிகை சமந்தா நோய் பாதிப்பு பிரச்சனையில் சிக்கும் முன்னதாக இந்த படத்தில் நடித்திருந்தார். சமந்தா ஸ்க்ரீனில் அழகு பதுமையாக இருக்கிறார். சமந்தா மட்டுமே இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக இருக்கிறார்.

காதல் காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்களை கொடுத்து வருகின்றனர். சீரியல் போன்று படம் இருப்பதாகவும் சிலர் கலாய்த்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சமந்தா ரசிகர்களும்கூட படத்தை பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Most Popular