Thursday, July 3, 2025
- Advertisement -
HomeEntertainment”ஹிருதயம்” மாதிரி முயற்சி பண்ணிருக்காங்களே.. எப்படி இருக்கு ரியோ நடிப்பில் வெளியான ”ஜோ” படம்.. ரிவ்யூ...

”ஹிருதயம்” மாதிரி முயற்சி பண்ணிருக்காங்களே.. எப்படி இருக்கு ரியோ நடிப்பில் வெளியான ”ஜோ” படம்.. ரிவ்யூ இங்கே!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட மோசமான படங்களுக்கு பின் நடிகர் ரியோ ”ஜோ” படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜோ. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவப்பு, மஞ்சள், பச்சை புகழ் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

வாரணம் ஆயிரம், ஹிருதயம் போன்ற படங்களை கம்மிங் ஆஃப் ஏஜ் ஜானரில் உருவாகியுள்ள படம் தான் ஜோ. ராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு முடித்தபின் கோவையில் இன்ஜினியரிங் படிக்க வருகிறார் ஜோ (ரியோ). கல்லூரி படிக்க வரும் அவர், கேரளாவை சேர்ந்த மாளவிகா மனோஜ் மீது காதல் கொள்கிறார். இவரை காதல் கொள்ள வைக்க பல்வேறு முயற்சிகள் செய்யும் ரியோ, ஒரு கட்டத்தில் காதல் ஓகே செய்கிறார்.

இதன்பின் காதலை மாளவிகா மனோஜின் வீட்டில் சொல்ல, அவரது பெற்றொருடன் ரியோவுக்கு கைகலப்பாகிவிடுகிறது. இதன்பின் மாளவிகாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவது தெரிய வர, நாயகியின் வீட்டிற்கு சென்ற ரியோவுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. மாளவிகா இறந்துவிட, பின்னர் குடி, போதை என்று வழி மாறுகிறார் ரியோ.

- Advertisement -

இதன்பின் இரண்டாம் பாதியில் வேறு ஒரு பெண்ணுடன் ரியோவுக்கு திருமணம் நடக்க, அந்த பெண்ணிற்கும் இவருக்கும் என்னவானது என்பதை மிகப்பெரிய ட்விஸ்ட் உடன் முடிகிறது படம். இந்த படத்தின் முதல் பாதியில் வசனங்களே இல்லை என்ற அளவிற்கு படம் காட்சிகளால் நகர்த்தப்படுகிறது. அந்த படத்திற்கு வசனங்களை இசையாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர் சித்து குமார்.

- Advertisement -

முதல் பாதியில் காதல், காமெடி என்று நகரும் படம், இரண்டாம் பாதியில் குடும்பம், செண்டிமெண்ட் லவ் என்று நகர்கிறது. சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், சின்ன பட்ஜெட் படம் என்பதால் பெரியளவில் கண்டு கொள்ள தேவையில்லை. இதனால் டாடா, குட் நைட் வரிசையில் ஜோவும் நல்ல ஹிட்டடிக்க வாய்ப்புள்ளது.  

Most Popular