பொழுதுபோக்கு

விக்ரம் திரைப்படத்தின் மெயின் வில்லனான ரோலக்ஸ் கதாபாத்திரம் முதலில் எனக்கு வந்ததுதான் – மனம் திறந்த பிரித்திவிராஜ்

ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது வரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் சூர்யா விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ் மொழியை கடந்து அனைத்து மொழியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் இத்திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக போவது குறிப்பிடத்தக்கது.

ரோலக்ஸ் கதாபாத்திரம் முதலில் எனக்கு வந்ததுதான்

ரோலக்ஸ் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் கடைசி மூன்று நிமிடங்களில் மட்டுமே வந்து அனைத்து ரசிகர்களையும் சூர்யா தனது நடிப்பாற்றலால் கட்டிப் போட்டார். விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக அதாவது மெயின் வில்லனாக சூர்யா நடிக்கப் போகிறார். அதுமட்டுமின்றி கைது இரண்டாம் பாகத்திலும் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு இடையே காட்சிகள் இருந்தாலும் இருக்கலாம்.

தற்பொழுது கடுவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக இருக்கும் மலையாள நடிகர் பிரித்விராஜ் பிரத்யேக பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் முதலில் எனக்கு வந்தது தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

பிரித்திவிராஜ் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மறுபக்கம் சூர்யா அளவுக்கு அவரால் நடித்திருக்க முடியாது என்றும் கூறிவருகின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top