Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentஅந்தமானில் மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் வரலாறு.. பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட டீசர்.. நாயகன் யாருனு பாருங்க!

அந்தமானில் மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் வரலாறு.. பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட டீசர்.. நாயகன் யாருனு பாருங்க!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரான சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘சுதந்திர வீர சாவர்க்கர்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மகாராஷ்டிராவில் 1883இல் மே 28ம் தேதி பிறந்தார் சாவர்க்கர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற இவர், இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வீர் சாவர்க்கர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் ஆவார்.

சாவர்க்கரை ஒருபுறம் பாஜக போன்ற கட்சிகள் கொண்டாடி வந்தாலும், அந்தமான் சிறையில் இருந்து வெளியே வருவதற்காக அவர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினார் என கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

- Advertisement -

இந்தநிலையில் சாவர்க்கரின் 140வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாவர்க்கரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சுதந்திர வீர சாவர்க்கர்’ என்ற படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகரான ரந்தீப் ஹூடா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனந்த் பண்டிட், ரந்தீப் ஹூடா ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். வீர சாவர்க்கராக ரந்தீப் ஹூடாவே நடித்திருக்கிறார்.

Who Killed his story? என்ற கேள்வியுடன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு இருவிதமான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதேநேரம் சமூக வலைதளங்களில் வீர சாவர்க்கர் டீசர் டிரெண்டாகியுள்ளது‌.

Most Popular