Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாசலார் vs டங்கி- பிரபாசை பார்த்து பயப்படுகிறதா பாலிவுட்.. தியேட்டர் தராததால் சலார் குழு புதிய...

சலார் vs டங்கி- பிரபாசை பார்த்து பயப்படுகிறதா பாலிவுட்.. தியேட்டர் தராததால் சலார் குழு புதிய முடிவு

சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களை விட அதிகமாக போட்டி கொள்வது அவர்களை சார்ந்த ரசிகர்கள் தான். அந்த வகையில் தற்போது இரண்டு ரசிகர்களுடைய கூட்டங்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக தோற்கடிக்க கிளம்பி இருக்கிறார்கள். அப்படி யார் அந்த இரண்டு நடிகர்கள் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். இதற்கு முன்பும் அவர் நிறைய தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இருப்பினும் அவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது பாகுபலி திரைப்படம் தான். பாகுபலி திரைப்படம் அவருடைய வாழ்வில் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டிய திரைப்படமாக ஆகும் .

- Advertisement -

பாகுபலி தொடர்ந்து அவர் நடித்த சாகோ, ராஜேஷ் யாம் ,ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை தழுவி மண்ணை கவ்வியது. அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் அளவில் அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடிபட்ட புலி போல் தற்பொழுது சலார் திரைப்படத்தின் மூலம் சீறிப்பாய இருக்கிறார் நடிகர் பிரபாஸ். கே ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கி வரும் இத்திரைப்படத்தின் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் ,ஜெகபதிபாபு,பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பேன் இந்தியன் மொழிகளில் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் நல்ல வரவேற்பு இருந்த நிலையிலும் பலரும் இத்திரை திரைப்படம் பார்ப்பதற்கு கே ஜி எஃப் திரைப்படத்தைப் பார்க்கின்ற அதே உணர்வை தருகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புலியைப் போல் பிரபாஸ் சீறி எழுந்து இத்த திரைப்படத்தின் மூலம் வந்தாலும் புலியை எதிர்க்க ஒரு பாலிவுட் சிங்கம் களம் இறங்கி  இருக்கிறது.வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 21ஆம் தேதி பாலிவுட் சினிமாவின் உச்சகட்ட நடிகரான ஷாருக்கான் உடைய டங்கி என்ற திரைப்படமும் பேன் இந்தியன் மொழிகளில் வெளிவர இருக்கிறது.

பத்தான், ஜவான் ஆகிய இரண்டு திரைப்படத்தின் மூலம் தலா ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்றவர் நடிகர் ஷாருக்கான். கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலத்தில் இருந்தே இவர் என்றால் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருந்த வண்ணம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகரான ஷாருக்கான் உடைய திரைப்படமும் நடிகர் பிரபாஸ் உடைய திரைப்படமும் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருப்பது ரசிகர்களிடையே சற்று கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் சாருக் கான் நடிக்கும் டங்கி திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை பாலிவுட்டில் முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற பெயரில் இயக்கி வெளியிட்டிருந்தார்.  இரண்டு திரைப்படங்களுமே 15 மொழிகளை வெளியிடப்பட இருப்பதால் தியேட்டர்களை புக் செய்வதில் சற்று கரசல் ஏற்பட்டிருக்கிறது.

வட இந்தியாவில் சலார் திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் தருவதாக கூறியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது ஷாருக் கான் நடிக்கும் டங்கி திரைப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த சலார் திரைப்படத்தின் உடைய படக்குழுவினர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் பிவிஆர், ஐனாக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நாங்கள் சலாம் திரைப்படத்தை கொடுக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular