Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதியை தொடர்ந்து அஜித்குமாருக்கும் வில்லனாகும் அதீரா.. விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத்.. எகிற வைக்கும் எதிர்பார்ப்பு!

தளபதியை தொடர்ந்து அஜித்குமாருக்கும் வில்லனாகும் அதீரா.. விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத்.. எகிற வைக்கும் எதிர்பார்ப்பு!

அ.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. பொங்கலுக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அஜித் குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் லைகா நிறுவனம் இயக்குநர் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால், அவரை நீக்கியது.

- Advertisement -

இதன்பின் அஜித்குமார் 61வது படத்தை எந்த இயக்குநர் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அஜித் குமார் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி என்று தலைப்புடன் படத்தின் டைட்டில் லுக்கும் வெளியாகியது.

இதனால் உடனடியாக ஷூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் குமார் பைக் ட்ரிப் புறப்பட்டார். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே விடாமுயற்சி படம் ட்ராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று உறுதி செய்தார்.

- Advertisement -
Ajith Vidamuyarchi

இதன் காரணமாக விடாமுயற்சி படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, தமன்னா என்று இரு நாயகிகள் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது வில்லனாக பாலிவுட்டில் இருந்து ஒருவரை இறக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கேஜிஎஃப் புகழ் சஞ்சய் தத்தை வில்லனாக நடிக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சஞ்சய் தத் ஏற்கனவே விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வில்லனாக நடித்துவிட்டார். இதனால் ரசிகர்களிடையே சஞ்சய் தத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது அஜித் குமாருக்கும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல், அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.  

Most Popular