சினிமா

அஜித் 62வது படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக் கொண்டதுக்கு அஜித் சார் தான் காரணம் ! லேட்டஸ்ட் அப்டேட் !

Ajithkumar Santhanam AK62

அஜித்குமாரின் 61வது படமான துணிவு இன்னும் ஒரு நாளில் உலகெங்கும் திரையரங்கில் வெளியாகவுள்ளது. வலிமை படத்தைப் போலவே இதுவும் ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படதுடன் அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்று படங்களுக்கு பின் ஓய்வு பெறுகிறது.

அடுத்ததாக அஜித்குமார் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார். பிரபலமான லைகா நிறுவனம் அதைத் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார், விக்னேஷ் சிவன் படம் என்றாலே அவர் தானே அதில் ஆச்சரியப்பட அவசியமில்லை. மேலும் படத்தின் இதர நடிகர்கள் சிலரும் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

அதில் முதல் பெரிய பெயர் நடிகர் அரவிந்த் சுவாமி. ஏற்கனவே இருவரும் 1994இல் பாசமலர்கள் படத்தில் ஒன்றாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.கே 62வில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்துக்கு எதிராக சித்தார்த் அபிமன்யு போன்ற பலமான வில்லன் பார்ப்போருக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். ரசிகர்களும் இச்செய்திக்குப் பின்னர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதைத் தவிர்த்து இன்னொரு சிறப்பான ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. அவர் தான் நம்ம சந்தானம். கிரீடம், பில்லா, வீரம் போன்ற படங்களில் கலக்கிய இந்தக் கூட்டணி திரும்ப ஒன்றாக ஸ்கிரீன் ஷேர் செய்கின்றனர். சில ஆண்டுகளாக கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் மீண்டும் பெரிய நடிகருக்கு கீழ் நடிப்பது இப்போது தான். அதற்கு பெரிய காரணம் அஜித் சார் தான் என்கிறார்கள்.

Advertisement

அஜித்குமார் அவர்கள், “ சார் நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணலாம். அந்த ரோலை நீங்க பண்ணணும்னு விரும்புறேன். ” என்ற அஜித்தின் அன்புக் கட்டளையை சந்தானம் அவர்களால் மறுக்க முடியவில்லை. இவ்வாறு செய்திகள் வந்துள்ளன. ஆனால் இன்னும் தயாரிப்பு நிறுவன பக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை. படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் இருந்து துவங்க உள்ளது, பின்னர் இதெல்லாம் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top