Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் கை கோர்க்கும் சரத்குமார்… மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இருப்பதால் எகிறும்...

ஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் கை கோர்க்கும் சரத்குமார்… மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இருப்பதால் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் எப்.ஐ.ஆர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஷ்ணு விஷால் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் எப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் அடுத்ததாக, மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம், தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு சிறிய வீடியோவுடன் வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிரின்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பான் இந்தியா படமாக இது உருவாக இருப்பதால், அனைத்து மொழியிலும் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய தகவலாக சரத்குமார், மிஸ்டர் எக்ஸில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபகாலமாக, ஹீரோ கதாபாத்திரங்களை கைவிட்டு குணசித்திர வேடங்களில் நடிப்பதில் சரத்குமார் கவனம் செலுத்தி வருகிறார். போர்தொழில் படத்தில் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிபடுத்தி பலரையும் சரத்குமார் கவனிக்க செய்தார். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு சரத்குமார் கதாபாத்திரம் பக்க பலமாக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஆர்யா – கவுதம் கார்த்திக் – மஞ்சு வாரியர் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் சரத்குமார் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

- Advertisement -

Most Popular