Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஅடடே… லியோ பிளாஷ்பேக்ல இந்த காட்சிகளாம் இருந்தாச்சா… கேட்கும்போதே நல்லாருக்கேப்பா… அப்றோம் ஏன்… லோகேஷு வைக்காம...

அடடே… லியோ பிளாஷ்பேக்ல இந்த காட்சிகளாம் இருந்தாச்சா… கேட்கும்போதே நல்லாருக்கேப்பா… அப்றோம் ஏன்… லோகேஷு வைக்காம போனாரு…

மாநகரம், கைதி படங்களுக்கு பிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட, மீண்டும் மக்களை கூட்டம் கூட்டமாக திரள வைத்தது இந்த திரைப்படம். மாஸ்டர் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும்,
வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

- Advertisement -

இதன்பிறகு பீஸ்ட், வாரிசு திரைப்படங்களில் நடித்தார் விஜய். அதேபோல் லோகேஷ் கனகராஜூம் விக்ரம் படத்தை கொடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டை பதிவு செய்ய இருவரும் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்திய எல்.சி.யூ. கான்செப்ட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால், அது லியோவிலும் வர வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே அவர்கள் கூறி வந்தனர்.

படத்தை செவன் ஸ்கீரின் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க, சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 19-ம் தேதி வெளியான லியோ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

படத்தில் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளதென்றும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. ஆனால் இது எதுவும் வசூலை பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். முதல்நாளில் மட்டும் லியோ திரைப்படம் 148 கோடியே 50 லட்சம் வசூல் செய்து பலரையும் வியக்க வைத்தது. அடுத்ததாக படம் வெளியாக ஒரு வாரத்தை கடந்த நிலையில், அது 461 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

இப்படி வசூலில் லியோ சாதனை படைத்தாலும், படத்தில் பிளாஷ்பேக் காட்சியை மட்டும் சுவாரஸ்சியமாக எடுத்திருந்தால் இதன் வெற்றி எங்கேயோ சென்றிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, லியோ படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாகவது,

லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ. கான்செப்ட்டில் மிகப்பெரிய வில்லன் லியோதான். யாரும் தொட முடியாத இடத்தில் லியோ இருப்பதாக அந்த ரோல்லை லோகேஷ் உருவாக்கி இருந்தார். எமோஷன் ஒன்றாலயே அவரை வீழ்த்த முடியும் என்பதால்தான், தங்கையை பறிகொடுத்து அதன்மூலம் திருந்துவதாக காட்சிப்படுத்தியிருந்தார். சொல்லப்போனால், பிளாஷ்பேக் காட்சியில் எலிசாவாக நடித்திருக்கும் மடோனா செபஸ்டினுக்கும், லியோ விஜய்யக்கும் எமோஷன் காட்சிகள் இருக்கும்.

அதேபோல், தாஸ் அன்ட் கோ குழுமத்திற்கு அடுத்த தலைவர் யார் என பேச்சு எழ, லியோதான் வரவேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள். அந்த கடுப்பில்தான் நரபலி யாரை கொடுப்பது என ஆன்டனிதாஸான சஞ்சய் தத் கேட்கும்போல், எலிசாவுக்கு பதில் லியோ என்றும் கூறுவார் ஹரால்டுதாஸான அர்ஜூன். படத்தின் நீளம் கருதியே இந்த காட்சிகளை நாங்கள் நீக்கிவிட்டோம் என்று தெரிவித்தார். இவரது பேட்டியை இணையத்தில் பகிரும் ரசிகர்கள், விட்டால் பிளாஷ்பேக் காட்சியையே லோகேஷ் படமாக எடுத்திருப்பார் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Most Popular