Entertainment

அஜித்துக்காக நடிகை ஷாலினி செய்த காரியம்? – விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் கதாநாயகியாக நடித்த காதலுக்கு மரியாதை, அமர்க்களம், அலைபாயுதே ,கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் போன்ற திரைப்படங்கள் இன்றுவரையிலும் 90ஸ் கிட்ஸ்களுடைய ஃபேவரட் திரைப்படங்களாக இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

இதில் இவர் நடித்த அமர்க்களம் திரைப்படத்தின் கதாநாயகனாக தல அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஒரு வித்தியாசமான காதல் கதை களத்தை கொண்டிருக்கும். இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் தன்னை அறியாமல் நேசிக்க தொடங்கினர். பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள்

Advertisement

திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகவும் ஒருவரை ஒருவர் அதே நேசிப்போடும். அதை அன்போடும் இரண்டு குழந்தைகளோடும் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் பலமுறை இணையதளங்களில் அவர்கள் பகிரும் புகைப்படங்களின் மூலம் அறிந்து வருகிறோம். இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் என்று சொல்லப்படும் சமூக வலைத்தளத்தின் இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சாமானியன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளத்தில் இணைவது பெரும் அளவில் யாரும் கண்டு கொள்ளாத விஷயம்தான். ஆனால் நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்ததை ரசிகர்கள் அப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

நடிகர் அஜித் தற்பொழுது துணிவு என்று ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும். இந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்கான பிரமோஷனில் நடிகர் அஜித் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதற்கு காரணமாக ஒரு நல்ல படத்திற்கு பிரமோஷன் தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement

எப்படி அவர் கூறியதில் கோபமடைந்த தளபதி ரசிகர்கள் இவரைக் குறி வைத்து தற்போது தலையின் மனைவியான நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்திருப்பதற்கு தன்னுடைய படத்தை பற்றிய அப்டேட்ஸ்களும் இணையதளம் முழுவதும் தன் பெயர் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இப்படிப்பட்ட செயலை நடிகர் ஷாலினியை வைத்து செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top