Monday, November 4, 2024
- Advertisement -
HomeEntertainmentமிருணாள் தாக்கூர் இல்லையாம்.. ட்ரெண்டிங் நாயகியை தூக்கிய சிவகார்த்திகேயன்.. நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்

மிருணாள் தாக்கூர் இல்லையாம்.. ட்ரெண்டிங் நாயகியை தூக்கிய சிவகார்த்திகேயன்.. நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்

மாவீரன், அயலான் படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக சாய் பல்லவி, வில்லனாக ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

சிறு வயது முதல் 35 வயது குடும்ப பொறுப்பை சுமக்கும் கணவர் வரையிலான ராணுவ வீரரின் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். இதற்காக முதலில் சிக்ஸ் பேக் வைத்த சிவகார்த்திகேயன், ஜனவரி மாதத்தில் உடலை குறைத்து கல்லூரி இளைஞரை போல் மாற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனின் சோல்ஜர் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசர் பிப்.17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் எஸ்கே 21 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளி வந்துள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

- Advertisement -

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படம், சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. வழக்கம் போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 

- Advertisement -

இந்த படத்தின் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் நாயகியை மாற்றம் செய்துள்ளது. கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சைட் ஏ மற்றும் சைட் பி படத்தின் நாயகியான ருக்மணி வசந்த நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Most Popular