Sunday, October 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஜோதிகா இல்லைனா என்ன.. சிம்ரனுக்கு கதை சொன்ன வெங்கட் பிரபு.. மீண்டும் இணையும் துள்ளாத மனமும்...

ஜோதிகா இல்லைனா என்ன.. சிம்ரனுக்கு கதை சொன்ன வெங்கட் பிரபு.. மீண்டும் இணையும் துள்ளாத மனமும் துள்ளும் கூட்டணி!

வாரிசு படத்திற்கு பின் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியான் ஆனந்த், மடோனா செபஸ்டியன், ஜாஃபர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

- Advertisement -

மொத்தமாக காஷ்மீர் மற்றும் சென்னையில் 126 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் டப்பிங் பணிகள் விரைந்து நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மொத்தமாக 3 பாடல்கள் மற்றும் 23 தீம் மியூசிக் இருப்பதாக சொல்லப்பட்டடுகிறது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3ஆவது வாரத்தில் சென்னையில் நடக்கவுள்ளது. இதனிடையே லியோ படத்திற்கு பின் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -
Thalapathy 68

அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அமெரிக்காவில் லுக் டெஸ்ட் செய்ய பயணித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதில் இளமையான கதாபாத்திரத்திற்கு நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோல் இன்னொரு கதாபாத்திரத்திற்கு நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே மெர்சல் படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜோதிகா நடிக்க மறுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்திலாவது மீண்டும் விஜய் – ஜோதிகா கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இம்முறை ஜோதிகா மறுத்ததாக தெரிகிறது. இதனால் சீனியர் நடிகையான சிம்ரனுடம் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட படங்களில் சிம்ரன் – விஜய் இணைந்து நடித்துள்ளனர். இதனால் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular