Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமா“ஒரு மனிதன் இறப்பயில் இதெல்லாம் பேசலாமா சார் ?” - இளையராஜாவின் பதிவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

“ஒரு மனிதன் இறப்பயில் இதெல்லாம் பேசலாமா சார் ?” – இளையராஜாவின் பதிவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தவர் நடிகர் மனோ பாலா, l நேற்று மர்மம் அடைந்தார். இவர் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ள பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

மனோபாலா, இயக்குனர் பாரதிராஜாவிடமிருந்து தனது திரையுல வாழ்வை ஆரம்பித்தார். மனோபாலாவின் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் கமலஹாசன். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக அறிமுகமானார்.

பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கியுள்ளார்.அந்த வகையில் சன் டிவி மற்றும் பாலிமர் டிவி களில் இவர் இயக்கிய தொடர்கள் வெற்றி தொடராக இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது. இயக்குனர் மற்றும் நடிகர் என்பது தாண்டியும் சிறந்த தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர்.

- Advertisement -

கல்லீரல் சீகிசைக்காக மருத்துவமனையில் அமைந்த கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட மனோபாலா, சிகிச்சை பலனின்றி தனது 69 ஆவது வயதில் நேற்று மரணம் அடைந்தார். இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இளையராஜா ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த வீடியோ பதிவில் இளையராஜா கூறியிருப்பது “என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பாலத்தில் தாண்டுகின்ற நேரத்தில் எத்தனை மணிக்கு தாண்டுகிறது என்று பார்த்து அதே நேரத்தில் என்னை பார்பதற்க்காக, காரில் என்னை பார்பதற்க்காக பாலத்தில் காத்திருந்த எத்தனயோ டைரக்டர்களில் மனோ பாலாவும் ஒருவர். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும்,என்னிடம் வந்து அப்போது அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங் நேரத்தில் சொல்லி என்னை மகிழ்விப்பார்” என்று கூறியிருந்தார்.

இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் அனைவரும் அவரை சாடி உள்ளார்கள்.இந்த நிலையில் டாக்டர் சர்மிளாவும் இவரது பதிவிற்கு பதில் தெரிவிக்குமாயில் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவிற்கு ரசிகர்கள் அனைவரும் இந்த பதிவு இரங்கல் பதிவு மாதிரி தெரியவில்லை நீங்கள் உங்களது பெருமைகளை இங்கும் கூறி உள்ளீர்கள் என்று அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Most Popular