Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentஅயலான் ஆடியோ லான்ச்.. நாள் குறித்த சிவகார்த்திகேயன்.. மரண மாஸ் சம்பவம் லோடிங்.. எப்போது தெரியுமா?

அயலான் ஆடியோ லான்ச்.. நாள் குறித்த சிவகார்த்திகேயன்.. மரண மாஸ் சம்பவம் லோடிங்.. எப்போது தெரியுமா?

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் வித்தியாசமான தோற்றம் கொண்ட ஏலியன், எப்படி மீண்டும் அதன் சொந்த நிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதே கதையாகும்.

- Advertisement -

பூமிக்கு வரும் ஏலியனுக்கும் சிவகார்த்திகேயன் கேங்கிற்கும் எப்படி நட்பு ஏற்படுகிறது, அதன்பின் நடக்கும் குழப்பம் என்பதே கதையாக அமைக்கப்பட்டுள்ளது. பானுப்பிரியா, ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 5 ஆண்டுகளாக நிதி பிரச்சனை காரணமாக படத்தின் பணிகள் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் அயலான் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப அயலான் படத்தின் டீசர், கிளிம்ஸ் காட்சிகள் என்று அயலான் படக்குழு அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதனிடையே அயலான் படத்தின் அறிமுக விழா சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2வது பாடலை அயலான் படக்குழு வெளியிடவுள்ளது. அதேபோல் டிசம்பர் 26ஆம் தேதி சென்னையில் அயலான் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தவுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக நாடுகள், அதிக ஸ்க்ரீன்களில் அயலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே லால் சலாம், கேப்டன் மில்லர், அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அயலான் படமும் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துள்ளது. 3 முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular