Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் தள்ளிப்போன அயலான்… பொங்கல் ரிலீசுக்கு விக்ரமுடன் மோதும் எஸ்.கே… கடைசியாக வந்து சேர்ந்த பிரபாஸ்

மீண்டும் தள்ளிப்போன அயலான்… பொங்கல் ரிலீசுக்கு விக்ரமுடன் மோதும் எஸ்.கே… கடைசியாக வந்து சேர்ந்த பிரபாஸ்

டாக்டர், டான் ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து பிரின்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்தத் திரைப்படம் படுதோல்வி அடைய, மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வினுடன் மாவீரன் படத்தில் எஸ் கே நடித்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற, சுறுசுறுப்பாக அடுத்த கட்ட பணிகளுக்கு புறப்பட்டார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார், 2017 ஆம் ஆண்டிலேயே சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் இணைந்தார்.

வேற்றுக்கிரகத்தில் வசிப்பதாக நம்பப்படும் ஏலியன் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு பிரச்சனைகளால் வெளிவராமல் முடங்கிப் போய் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் சிஜி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனால் தீபாவளியன்று படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது.

- Advertisement -
Sivakarthikeyan Maaveeran

ஆனால் சிஜி பணிகள் தாமதம் ஆவதால் அயலான் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதே போல், பா ரஞ்சித் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் பொங்கலன்றே வெளியாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், கோலார் தங்க வயலில் நடைபெற்ற உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை பா ரஞ்சித் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதேபோல் பாகுபலி பட புகழ் நட்சத்திரமான பிரபாஸின் சலார் திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டே வெளியாகிறது. கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் எடுத்துள்ள இந்த திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், சாகோ, ராதே ஷியாம், ஆதி புருஸ் என அடுத்தடுத்த தோல்வி படங்களை பிரபாஸ் கொடுத்ததால், டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை வாங்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சலார் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இந்தப் படங்களுடன், மகேஷ் பாபு நடித்து வரும் குண்டூர் காரம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Most Popular