Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் ரஜினியுடன் மோதும் எஸ்.கே… இந்த முறை நேருக்கு நேர் மோதுவாரா மாவீரன்… அயலானுக்கு மீண்டும்...

மீண்டும் ரஜினியுடன் மோதும் எஸ்.கே… இந்த முறை நேருக்கு நேர் மோதுவாரா மாவீரன்… அயலானுக்கு மீண்டும் வந்த பிரச்சனை!

தர்பார் அண்ணாத்த பட தோல்வியினால் துவண்டு இருந்த ரஜினிகாந்த்க்கு, ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த தயாரிப்பு நிறுவனம், ரஜினிக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தது.

- Advertisement -

இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றியால் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ரஜினியின் 171 வது திரைப்படமாக உருவாகும் இதனை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே, ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் வாரம் தொடங்குகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கிறாராம். வில்லனாக பகத் பாசில் உள்ளார். ராணாவுக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை ஞானவேல் எழுதி இருக்கிறார். நாகர்கோயில் கன்னியாகுமரி பகுதியிலிருந்து படபிடிப்பு நடைபெறுகிறது. இதுபோக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில், லால் சலாம் திரைப்படம் பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தான், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் அயலான் திரைப்படமும் வெளியாகிறது.

- Advertisement -

முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம், சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் ரஜினியின் திரைப்படமான ஜெயிலரும் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ரேஸில் இருந்து பின்வாங்கிய மாவீரன், முன்கூட்டியே ஜூலை மாதம் வெளியாகி ஹிட்டும் அடித்தது. இந்த நிலையில் தற்போது அயலான் கூடவே, ரஜினியின் லால் சலாம் திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை, ரஜினியுடன் கோதாவில் குதிப்பாரா அல்லது ரேஸில் இருந்து பின் வாங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் எஸ் கே ரசிகர்கள் இந்த முறை கண்டிப்பாக அயலான் சொன்ன தேதியில் இறங்கும் என இணையத்தில் பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Most Popular