Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதி இடத்தை நிரப்பிருவாரு போலவே.. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சிவகார்த்திகேயன்.. மனுஷன் எவ்வளவு உழைச்சிருக்காரு!

தளபதி இடத்தை நிரப்பிருவாரு போலவே.. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சிவகார்த்திகேயன்.. மனுஷன் எவ்வளவு உழைச்சிருக்காரு!

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் அதிரி புதிரி ஹிட்டடித்தது. ரூ. 40 கோடி மதிப்பில் உருவான இந்த திரைப்படம், ரூ.85 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் வழக்கமான சிவகார்த்திகேயன் படமாக அல்லாமல் ஃபேன்சஸி ஜானரில் உருவாகி ரசிகர்களை ஈர்த்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. குழந்தைகள், குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும், அயலான் 2 உருவாக்க முயற்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

ரங்கூன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். காஷ்மீர், சென்னை, ஐதராபாத், மும்பை என்று பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. 

- Advertisement -

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள சூழலில், ஜூலை மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பிப்.17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே21 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்கான டீசரே பயங்கரமான வீடியோவை வெளியிட்டு அசரடித்துள்ளது படக்குழு.

- Advertisement -

இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் உடல் ரீதியாக எப்படி தயாராகினார் என்பதை காட்டும் வகையில், அவரின் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியுள்ள சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், இந்த வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இதனால் தளபதி விட்டு செல்லும் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.

Most Popular