Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா..! ரகசியம் வெளியானதால் அதிர்ச்சியில் ஷங்கர்

இந்தியன் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா..! ரகசியம் வெளியானதால் அதிர்ச்சியில் ஷங்கர்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குனர் சங்கர் கட்டி காத்து வந்த ஒரு ரகசியத்தை திரைப்பட வணிக நிபுணர்கள் கசிய விட்டிருப்பது சங்கரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இந்தியன் 2  படத்தில் மெயின் வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். சங்கர் படத்தில் நண்பனுக்கு பிறகு எஸ் ஜே சூர்யா இணைந்திருக்கிறார். கமலின் தீவிர ரசிகரான எஸ்.ஜே. சூர்யா அவருடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து பல இன்டர்வியூவில் பேசியுள்ள எஸ் ஜே சூர்யா தாம் ஒரு மிகப்பெரிய படத்தில் நடித்து வருவதாகவும், அது பற்றி செய்தி வெளிவந்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று கூறி வந்திருக்கிறார்.

- Advertisement -

இதனை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி இருப்பது ஷங்கரை கோபமடைய வைத்திருக்கிறது. எஸ் ஜே சூர்யா கொரோனாவுக்கு முன்பே இந்தியன் 2 வில் தாம் நடிக்க இருந்த காட்சிகளை ரகசியமாக நடித்துவிட்டு வந்திருக்கிறார்.

இதன் மூலம் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டாளங்களில் பட்டியல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. கமல், எஸ். ஜே சூர்யா, விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா,மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியன், டெல்லி கணேஷ் ஆகியோர் இந்தியன் 2 வில் நடித்திருக்கிறார்கள்.

எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கும் பல படங்கள் மிகப்பெரிய ஹிட் பெற்றுள்ள நிலையில், இந்தியன் தாத்தாவும் எஸ் ஜே சூர்யாவும் ஒரே காட்சியில் வந்தால் அது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போது சில்லறைகளை சிதற விட்டு வருகிறார்கள். இது எஸ் ஜே சூர்யா வின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular