Monday, November 4, 2024
- Advertisement -
HomeEntertainmentசிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்.. தயாரிப்பில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய கமல்ஹாசன்.. இயக்குநர்...

சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்.. தயாரிப்பில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய கமல்ஹாசன்.. இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் வந்த சோதனை

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். லவ் டுடே படத்தின் மூலமாக முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்து அசத்தினார். இதன் பின் பிரதீப் ரங்கநாதன் எந்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

- Advertisement -

ஆனால் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் நடிக்க ஆர்வமாக காத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு இயக்குநர்களும் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து படம் இயக்க கதை கூறியிருந்தனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுக்கு கதை கூறியிருந்தார்.

இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதேபோல் இந்தப் படமும் மொபைல் ஃபோன் மற்றும் காதலை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular