Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாவெப் சீரிஸ்போலீஸ் அதிகாரியாக மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.. நாளை வெளியாகும் டிரைலர்

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.. நாளை வெளியாகும் டிரைலர்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு நிகராக வெப் சீரியஸ் என்று சொல்லப்படும் வலைத்தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஒரே கதையை பல எபிசோடுகள் ஆக பிரித்து ஒரு தொடர் வடிவத்தில் எடுக்கப்படும் இந்த வெப் சீரியஸ்களில் பல பிரபலமான நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

திரைப்படங்களைப் போலவே இந்த வெப் சீரியஸ் களுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்று எல்லா குழுவினர்களும் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் காயத்ரியின் உருவாக்கத்தில் பிரம்மா ஜி ,அனுஷாரன் முருகனின் தயாரிப்பில் நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளியான சூழல் என்று வலைத்தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

- Advertisement -

சுழல் ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டது. இந்த வெப் சீரியஸ் கடந்த ஜூலை 17ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. மேலும் இது வெற்றியும் அடைந்தது. இப்படி ரசிகர்களால் கவரப்பட்ட சுழல் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களின் மனதை வென்று குஷி, வாலி ,அன்பே ஆருயிரே, இசை வியாபாரி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ் டி சூர்யா தற்பொழுது வெப் சீரியஸ்களிலும் தன்னுடைய திறமையை காட்டத் தொடங்கி இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா நடிக்கும் வதந்தி என்ற வெப் சீரியசையும் புஷ்கர் மற்றும் காயத்ரி தான் உருவாக்கி இருக்கிறார்கள் தென்னிந்தியா சினிமாவிலேயே புஷ்கர் மற்றும் காயத்ரி தான் தம்பதியராகவே திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரியஸை இயக்குனர் ஆண்டிரு லூயிஸ் தான் இந்த வெப் சீரியஸை இயக்கியிருக்கிறார்.

இந்தத் வெப் சீரிசில் நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். இவரோடு இணைந்து இந்த வெப் சீரியஸில் நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா போன்ற பிரபலங்களும் நடித்து வருகிறார்கள. மேலும் இதில் 90ஸ் கிட்ஸ் களின் கனவு நாயகியான பின் தற்பொழுது சர்தார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகை லைலா இந்த வதந்தி என்ற வெப் சீரிசில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரியஸின் ட்ரைலர் நவம்பர் 22 வலைத்தளங்களில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அமேசான் பிரைமில் வதந்தி என்ற வெப் சீரியஸ் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரியஸும் சுழலைப் போன்று ஒரு சிறந்த கதை களத்தைக் கொண்டிருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular