Friday, March 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஎல்சியூ-வில் இணையப் போகும் ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? குஷியில் ரசிகர்கள்!

எல்சியூ-வில் இணையப் போகும் ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? குஷியில் ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். பலரும் எதிர்பார்த்ததைப் போலவே இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவையே புரட்டிப் போடும் அளவிற்குச் சிறப்பான திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் திறமையாகச் செய்திருந்தார். விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தையே வைத்து இப்படத்தை நகர்த்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ். அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுத்துச் சரியான முறையில் கதை சென்றதே இப்படத்தின் மிகப்பெரிய பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கு முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களையும் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து லியோ எனும் பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் காஷ்மீரில் இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், அர்ஜுன் என பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூட்டணி இணையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் கைதி – 2 எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி தகவலால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள், இது எல்- சி-யு வில், இடம்பெறுமா என எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

Most Popular