Friday, September 13, 2024
- Advertisement -
HomeEntertainmentஇந்தியன்-2 படத்தில் இணைந்த ராம் சரண்.. கேமியோ ரோலில் இணைந்த கேம் சேஞ்சர்.. இன்னும் ஷங்கர்...

இந்தியன்-2 படத்தில் இணைந்த ராம் சரண்.. கேமியோ ரோலில் இணைந்த கேம் சேஞ்சர்.. இன்னும் ஷங்கர் என்னென்ன பண்ண போறாரோ!

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் – இயக்குநர் ஷஙக்ர் இருதரப்பையும் சமாதானம் செய்து ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணை தயாரிப்பை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியன் – 2 படப்பிடிப்பை ஷங்கர் தீவிரமாக நடத்தி வந்தார்.

- Advertisement -

அதேபோல் இந்தியன் – 2 படப்பிடிப்பை நடத்தியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு பக்கம் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வந்தார். இந்தியன் – 2 படத்தில் காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல்ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா, ஐதராபாத், சென்னை என்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதன்பின் இந்தியன் – 2 படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சி மற்றும் பாடல் காட்சிகளையும் ஷங்கர் மேற்கொண்டு வந்தார்.

- Advertisement -

ஒரே நேரத்தில் இரு படங்களில் ஷங்கர் பணியாற்றி வந்தாலும், இரு படங்களின் தரத்திலும் எந்த குறைபாடும் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இரு படங்களும் நன்றாக வருவதால், படக்குழு உற்சாகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியன் – 2 படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் கேம்சேஞ்சர் படத்தை முழுதாக நம்பியிருக்கும் ராம் சரண், ஷங்கரின் உழைப்பால் உற்சாகத்தில் இருக்கிறார். இதனால் இந்தியன் -2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியன் – 2 படத்தின் பெரும்பான்மை காட்சிகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன், ஷங்கருக்கு வாட்ச் கொடுத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Most Popular